"அமுல்" நிறுவன பெயரில் இயங்கும் போலி இணையதளங்களை முடக்க உத்தரவு

0 2580
""அமுல்" நிறுவன பெயரில் இயங்கும் போலி இணையதளங்களை முடக்க உத்தரவு

அமுல் நிறுவனத்தின் வர்த்தக உரிமைகளை பாதுகாக்கும் விதமாக அந்நிறுவனத்தின் பெயரில் போலியாக இயங்கும் இணையதளங்களை முடக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரும் கூட்டுறவு பால் விற்பனையகமான அமுல் நிறுவனத்தின் பெயரில், சில மோசடி பேர்வழிகள் போலியாக இணையதளங்களை உருவாக்கி, விநியோக உரிமம் தருவதாக ஏமாற்றி, லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டனர்.

இது குறித்து அமுல் நிறுவனத்திற்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்த நிலையில், அந்நிறுவனம் தொடுத்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், அதன் பெயரில் இயங்கும் போலி வலைத்தளங்களை முடக்குமாறு தொலை தொடர்பு துறைக்கு உத்தரவிட்டது.

மேலும், இனி அந்நிறுவனத்தின் பெயரில் புதிதாக இணையதளங்களை ஆன்லைனில் பதிவு செய்யவும் நீதிமன்றம் தடை விதித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments